Friday, September 21, 2018

திருமால் ஒருபா ஒருபது - இரட்டணை நாராயண கவி

திருமால் ஒருபா ஒருபது

- இரட்டணை நாராயண கவி

துன்பங்கள் கண்ட போதும் கலங்காதீர்;
மணிவண்ணன் பெயரைச் சொல்ல மறவாதீர்;
கூப்பிட்டக் குரலுக்கு வந்திடுவான்;
குறைக ளைந்து அவனருளைத் தந்திடுவான்.                      (1)


தந்திரங்கள் செய்வதிலே வல்லவனை; தானென்ற
ஆணவங்கள் மாய்ப்பவனை; வேதங்கள் மீட்டெடுத்து
வந்தவனை; எப்போதும் நாம்தொழுதால்
துன்பங்கள் நெருங்காதே காலம் மூன்றில்.                        (2)

மூன்றடியாய் மண்கேட்டு; ஈரடியால் உலகளந்து;
வானுயர நின்றவனைத் தினந்தொழுது வருபவர்க்கு;
திருவாயால் கீதைமொழி சொன்னவனின்
அருளாலே சோதனைகள் ஒருநாளும் வாராதே.                   (3)

வாராது நோய்நொடிகள்; கடல்நடுவே நகர்புகுந்து
இராவணனின் செருக்கறுத்து வேங்கடத்துள்
நின்றவனை மனம்நினைந்து புகழ்பாடி வருபவர்க்கே.              (4)

வருந்துன்பம் பறந்து போகும்; கோகுலத்தில்
நிரைகாத்த கோபியரின் குலவிளக்காம் கோவிந்தன்
புகழ்பாட; குறும்புகள் பலசெய்து
குழுசேர்ந்து திருடித் தின்பான் வெண்ணையே.                    (5)

வெண்ணையுண்ட வாயாலே மண்ணுண்டு புவிகாட்டி
மண்ணுலகோர் தாம்உணர பரம்பொருளாய் நின்றவனின்
அடியார்க்கு அமுதூட்டி வாழ்பவர்கள்
நெடியாய வேங்கடவன் திருப்பதத்தை அடைவாரே.                (6)

அடையாத துன்பங்கள் தந்தபோதும் தாங்கிடுவேன்;
இடையாளின் துன்பத்தில் பெரிதில்லை; வில்லேந்தி
துயர்தீர்த்த அருளாளா; நீஎந்தன்,
துயர்தீர்க்க மாட்டாயோ? உன்னையன்றி வேறில்லை.              (7)

வேறாகித் தூண்பிளந்து நின்பெயரைச் சொன்னவனின்
துயர்தீர்த்தாய்; தினந்தோறும் உன்பெயரை உச்சரித்தேன்;
ஆயிரமாம் துன்பங்கள் வந்தபோதும் கலங்கமாட்டேன்;
தாயாக எனைக்காக்க நீவருவாய்;
நெய்தானே உன்னுணவு; உன்மேனிக் காயாம்பூ.                    (8)

காயோடு கனியுண்டு கடுந்தவங்கள் வேண்டாமே;
ஓயாமல் அலைவீசும் பார்கடலுள் உறைபவனை;
அடிதொழுது அறம்காத்தால் தீவினைகள்
படியாதே; பார்போற்றும் வைகுந்தம் ஆள்வாயே.                    (9)

ஆள்ளுயரம் வளராத வாமணனை; வில்லேந்தி
கோலவிழி மங்கைதுயர் தீர்த்தவனை; சபைநடுவே
தங்கை மானம் காத்தவனை;
சங்கேந்தி நின்றவனை; தினம்போற்றி வாழ்வோமே.                (10)



Popular Feed

Recent Story

Featured News