Saturday, September 15, 2018

ஆசிரியர் தகுதி ஒப்புதல் கட்டாயம் :கல்வியியல் பல்கலை புதிய உத்தரவு

கோவை;நடப்பு கல்வியாண்டு முதல், எம்.எட்., பாடப்பிரிவு நடத்துவதற்கு, தகுதியான ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கான, பல்கலையின் ஒப்புதல் ஆணையை, கல்லுாரி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.



எம்.எட்., மாணவர் சேர்க்கை, 17ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் பெரும்பாலான இடங்கள், சேர்க்கையின்றி காலியாகவுள்ளன.சில தனியார் கல்லுாரிகளில், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இன்றி எம்.எட்., பாடம் நடத்துவது, ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

அனைத்து கல்வியியல் கல்லுாரிகளுக்கும், பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'எம்.எட்., பிரிவில் ஐம்பது மாணவர்கள் படிக்கும் கல்லுாரியில், விதிமுறைகளின்படி, 10 ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டியது அவசியம்.



Popular Feed

Recent Story

Featured News