Thursday, September 27, 2018

கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுப்பது எப்படி: டிஜிட்டல் இந்தியாவில் எதுவும் சாத்தியம்.!

முன்பு எல்லாம் ஏடிஎம்களுக்கு பணம் எடுக்க செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் ஏடிஏம் கார்களையும் எடுத்து செல்ல வேண்டியதாக இருக்கும். மேலும் அப்படியே சென்றாலும் பணம் எடுக்கம் போது கார்களால் பல்வேறு பிரச்னைகள் இருகின்றன.







அப்படி கொண்டு சென்றாலும் கார்டில் கீறல்கள் இருந்தாலும் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாத சூழ்நிலைக்கு தளப்பட்டோம். மேலும் புதிய ஏடிஎம்கார்டுகளையும் பெற சமந்தப்பட்ட வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வீண் அலைச்சல்:

விண்ணப்பித்தும் ஏடிஎம்கார்டு அன்றே வந்தாலும், அந்த பின் நம்பர் ஆக்டிவேட் ஆக குறைந்தது 3 நாள் வரை ஆகும். இதனால் ஒரு சிலர் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதும் உண்டு.




ஸ்மார்ட் போனில் சாத்தியம்:

இனி ஏடிஎம்கார்டுகளை வீட்டில் மறந்து விட்டாலே இல்லை. சேதமடைந்து விட்டாலே நாம் ஹாயாக சென்று வங்கியில் கார்டு இல்லாமலும் பணம் எடுக்க முடியும். இது எல்லாம் தற்போது சாத்தியமாகியுள்ளது. இந்த வங்கி நடவடிக்கைக்கு தற்போது ஸ்மார்ட்போன் கட்டயம் தேவைப்படுகின்றது.




ஏர்டெல் அறிவிப்பு:

இந்நிலையில் புதிய அறிவிப்பபை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் மை ஏர்டெல் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.




கார்டு இல்லாமல் பணம் எடுப்பது:

முதலில் ஐஎம்டி வசதி கொண்ட ஏடிஎம்மிற்கு செல்ல வேண்டும். கையில் ஸ்மார்ட் போன் இன்டர் நெட் வசதியுடனும் இருக்க வேண்டும்.




மை ஏர்டெல் ஆப் கிளிக் செய்யவும்:

அங்கு அந்த ஏடிஎம் சென்ற பிறகு, மை ஏர்டெல் ஆப் மூலம் கேஷ் வித்டிராவ் செய்ய வேண்டும். பின்னர் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.






ஓடிபி கோடு :

இதையடுத்து உங்களது போனிற்கு ஓடிபி கோடு வரும். அதைப் பதிவிட்டு ஆப்ஷன் மூலம் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.




இலவசம்:

முதல் இரண்டு பணப்பரிவத்தனை மட்டும் இலவசமாக வழங்கப்படுகின்றது. அதன் பிறகு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்த வசதி நாடு முழுவதும் உள்ள 20,000 ஏடிஎம்களில் இந்த வசதி நடைமுறையில் இருக்கின்றது.



Popular Feed

Recent Story

Featured News