Sunday, September 16, 2018

பூமியைக் காக்கும் கவசம்! (ஓசோனைப் பற்றிய சிலமுக்கிய தகவல்கள்)



இன்று (செப்டம்பர் 16) உலக ஓசோன் தினம் (World Ozone Day). ஓசோனைப் பற்றிய சில தகவல்கள்:



1. செப்டம்பர் 16 உலக ஓசோ தினமாகக் கொண்டாடப்படுவதற்கான காரணம், ஓசோன் படலத்தின் பாதிப்பைத் தவிர்ப்பதற்கான Montreal Protocol என்னும் ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு இந்த நாளில்தான் கையெழுத்திடப்பட்டது.

2. ஓசோன் நீல நிறத்திலான வாயு.

3. ஓசோன் மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்த மூலக்கூறு.

4. கிறிஸ்டியன் ஃப்ரீட்ரிச் ஸ்கான்பென் (Christian Friedrich Schonben) என்பவர்தான் 1840ஆம் ஆண்டில் ஓசோனைக் கண்டுபிடித்தார். ஓசோன் என்பதன் அர்த்தம் “to smell”.

5. ஓசோனின் தொழில்துறை பயன்பாடு, கிருமி நீக்கம் மற்றும் நீச்சல்குள நீர் சுத்திகரிப்பு.

6. நமக்குக் கிடைக்கும் ஓசோனில் பெரும்பான்மையான ஓசோன் பூமியிலிருந்து 12-20 மைல்கள் உயரத்தில்தான் கிடைக்கிறது.

7. ஓசோன் சூரியனின் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சிக்கொள்ளும். நமக்கும் மற்ற உயிர்களுக்கும் இந்தக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை ஓசோன்தான் தடுக்கிறது.



8. முதலாம் உலகப் போரின்போது, காயங்களைச் சுத்தப்படுத்தவும் அடிபட்ட காலைச் சரிபடுத்தவும் ஓசோன் பயன்படுத்தப்பட்டது.

9. கடற்கரையில் ஓசோனின் மணம் என்று பலரும் நினைப்பது, உண்மையில் அழுகும் கடற்பாசியின் மணம்.

10. ஏசி, ஃப்ரிட்ஜ் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் குளோரோஃப்ளோரோ கார்பனிலிருந்து உருவாகும் ஒரு குளோரின் அணு 1,00,000 ஓசோன் மூலக்கூறுகளை அழித்துவிடுமாம்.



Popular Feed

Recent Story

Featured News