Friday, September 7, 2018

மூளை அளவு கூடினால் அறிவுத்திறன் கூடுமா ??? ஓர் ஆய்வு...!!

ஆண் பெண் = அறிவியல்

#ஆண்_என்ன?
#பெண்_என்ன?


#அறிவியல் #சொல்வதென்ன?

எதிர் துருவங்கள்தானே ஈர்க்கும்?

ஒத்த துருவங்கள் விலகி விடாதா?

இந்த உண்மை ஆண்_பெண் பாலியல் வேற்றுமைக்கும் பொருந்தாதா?

ஆராய்ந்து கண்ட அறிவியல் உண்மைகள்

ஆண் பெண் பற்றிய உடலளவில் உள்ள ஆராய்ந்து அலசி, தெரிந்து கண்ட அறிவியல் உண்மையைப் பார்ப்போம்.

அளவு கூடினால் அறிவு கூடுமா?

(1) சராசரியாக,
ஆண்களில் 24.7 சதவிகிதத்தினர் எடை கூடுதலாக உள்ளனர். பெண்கள் 27 சதவிகிதத்தினர் கூடுதல் எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

(2) ஆணின் மூளை 87.4 கியூபிக் அங்குலம் அளவுடையது. பெண்ணின் மூளை 76.8 கியூபிக் அளவுடையது. மூளையின் அளவிற்கும் ஆற்றலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

சிந்தனை செய்வதில் சிறிதும் வேறுபாடில்லை

(3) பொதுவாக, மனிதனின் மூளை நரம்புயிரணுக்கள்
(Nervous Cells) இது நரம்பியலில் (Neurology) நியூரான்கள் (Neurons) எனப்படும். இவை பொதுவாக மாந்தனிடம் சராசரி 1400 கோடி நியூரான்கள் உள்ளன.

ஆனால், பெண்ணிடம் இவை சற்றுக் குறைவாகவே உள்ளன. இதனால் சிந்தனையிலோ அறிவிலோ குறைவு இல்லை.

வழுக்கை விழுவதில்லை

(4) ஆண்களுக்கு 25 வயது முதற்கொண்டே வழுக்கை ஏற்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், பெண்களுக்கு சாதாரணமாக 70 வயதுவரை வழுக்கைக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை.

குறைவிலாக் கொழுப்பு

(5) ஆணின் எடையில் 15 முதல் 18 சதவீதம் கொழுப்பு அடங்கியுள்ளது. ஆனால், பெண்ணின் எடையில் 25 முதல் 28 சதவீதம் கொழுப்பு காணப்படுகிறது.

எடை எப்படி?

(6) ஆணின் மூளையின் எடை பொதுவாக 1400 கிராம். பெண்ணின் மூளையின் எடை கொஞ்சம் குறைவாகவே உள்ளது.

வியர்வை சுரப்பதிலும் வேறுபாடு

(7)ஆணின் மூச்சுப் பை, சற்றுப் பெரியது; பெண்ணினுடையது கொஞ்சம் குறைவு.

(8)ஆணுக்கு வியர்வை அதிகம் சுரக்காது; ஆனால் பெண்ணுக்குக் கூடுதலாகச் சுரக்கும்.

கரகர குரல்

(9)பிறப்புறுப்புகளின் வளர்ச்சி இரு பாலருக்கும் பொது. அமைப்பு வேறுபாடு டையது. ஆண்ட்ரஜன் (Androgen) என்னும் நாளமில் சுரப்பு இயக்கு நீர் (Duetless gland - Endoerine) ஆண்களிடம் உண்டு.

இது, தாடி, மார்பு, பரந்த மார்பு கரகரப்பான குரல்களுக்குக் காரணமாக அமைகிறது. கொஞ்சும் குரலினிமை

பெண்களுக்கோ, ஈஸ்ட்ரஜன் (Estrozen) இயக்கு நீர் சுரப்பி அமைந்து உடலின் மென்மை, மெருகு, குரலினிமை போன்றவற்றிற்குக் காரணமாக அமைகிறது.
அவனுக்கும் அவளுக்கும்

(10) ஆண்களுக்கு, எலும்பு முறிவு, காயம், நாட்பட்டு ஆறாத புண்கள் போன்றவை பெண்களைக் காட்டிலும் அடிக்கடி ஏற்படுகின்றன.

பெண்களுக்கு அதிக தீவிரம் அற்ற நோய்களான சளிப்பிடிப்பு, தலைவலி, எலும்பு மற்றும் உணவுக்குழல் தொடர்புடைய நோய்கள் அடிக்கடி வருகின்றன.

(11)ஆண்களுடைய இடுப்பெலும்பு (Pelvis) 13 செ.மீ அகலமே உடையது; பெண்களின் இடுப் பெலும்பு (Pelvis) 13.4 செ.மீ அகலம் உள்ளது.

வண்ணக் குருடு வருவது

(12) ஆண்களில், 4 சதவீதத்தினர் நிறக்குருடர்கள்
(Colour Blind) ஆக உள்ளனர். பெண்களில் 1 சதவீதத்தில் 5 பகுதியினர் மட்டுமே நிறக் குருடர்களாக உள்ளனர்.

எத்தனை தடவை இதயத்துடிப்பு?

(13) ஆண்களின் இதயம் 1 மணித்துளியில் (Minitue) 72 தடவை துடிக்கிறது. பெண்களுக்கு 78 தடவைகள் இதயம் துடிக்கிறது.

குருதி அடர்த்தி நிலை

(14) ஆணின் குருதி அடர்த்தி அதிகம். இதில் இரும்புச்சத்து (Haemoglobin) குறைவு. பெண்ணின் குருதி அடர்த்தி குறைவு.

நிலைமாறும் சுண்ணாம்புச் சத்து

(15) ஆணின் உடலில் சுண்ணாம்புச் சத்து (Calcium) நிலையாக _ சீராக இருக்கும். பெண் உடலில் சுண்ணாம்புச் சத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. மாத விடாயின்போதும் கருக்கொண்டுள்ள காலத்தும், சுண்ணாம்புச் சத்தை இழக்கிறாள். பிள்ளைப்பேறு அவளை நலிவடையச் செய்கிறது. பெண்களுக்குப் பிள்ளைப்பேறு கூடாது என்பார் தந்தை பெரியார்.

மாறுபட்ட மதிப்பு

(16) ஆணின், மதிப்பு 5 கோடி; பெண்ணின் பெறுமானமோ 7 கோடி. ஏன் இப்படி? ஆணுக்கு இல்லா பாலூட்டும் மார்பகங்கள் இரண்டு கூடுதலாக இருப்பதால் 2 கோடி அதிகம். இந்த, சில சமூக-_உயிரியல் (Socio biology).

உணரவேண்டிய பெண்ணின் உடலியல்

வேறுபாடுகளை நாம் உணர்ந்தோமானால் பெண்ணை உடலியல் அளவில் புரிந்துகொண்டு பெண்மையைப் போற்ற முடியும். போற்ற வேண்டும்.

இருபாலாரிடமும் அமைந்த இயல்பான கொழுப்பு

(17) ஆணிடம் நடுக்கம் அதிகமாகவே உள்ளது. பெண்ணிடம் அதிக நடுக்கம் ஏற்படுவதில்லை. குளிராலோ பிற காரணங்களாலோ;

(18) ஆணின் உடல் தோலின் கீழே உள்ளது கொழுப்பு அடுக்கு (Fat layer).இதனைவிட பெண்ணின் மேனியின் அடியில் கொழுப்பு அடர்ந்துள்ளது.

அறிய வேண்டிய அடிப்படை

மேலே நாம் குறிப்பிட்ட அறிவியல் உண்மைகள் ஆண் பெண் வேறுபாடு சமூக இயலில் எந்த விளைவையும் உண்டாக்கவில்லை; உண்டாக்காது.

அறிவியல் சொல்வதன்படி ஆண் என்ன?

பெண் என்ன?
நீ என்ன?

எல்லாம் ஓரினம்தான்! மனித இனம்..!!

உயர்வு தாழ்வற்ற மாந்த இனம்தான்.

பாலியல் அநீதி
(Gender injustice) ஏற்படக்கூடாது.

Popular Feed

Recent Story

Featured News