Thursday, September 27, 2018

அனுமதி பெறாத பள்ளிகளுக்கு சீல்: மாவட்ட கலெக்டர் உத்தரவு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. 

கூட்டத்துக்கு தலைமை வகித்து, கலெக்டர் ராசாமணி பேசியதாவது: 



மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், வையம்பட்டி, புள்ளம்பாடி, தொட்டியம், முசிறி, லால்குடி, உப்பிலியபுரம், தா.பேட்டை உள்ளிட்ட வட்டாரங்களில், பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்க வேண்டும். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். 

25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை கண்டறிந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு விபரம் தர வேண்டும். அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் பள்ளிகளை, அக்., 10க்குள் கண்டறிந்து, அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடி சீல் வைக்க வேண்டும். 

அந்த விபரங்களையும் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில். முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் உட்பட மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.



Popular Feed

Recent Story

Featured News