Sunday, September 16, 2018

எல்லோரும் தெரிஞ்சிக்கங்க சிறுநீரக கற்கள் உருவாவதை முன்கூட்டியே தடுப்பது எப்படியென்று!




இந்த காலத்தில உணவுமுறைகள் உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் அளவிற்க்கு தான் உள்ளது இதனால் உடலுக்கு ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது அத்துடன் சிறுநீரக கற்கள் கூட உருவாகும் வாய்ப்பு உள்ளது இதை தடுக்க எளிய வழி முறையை தெரிந்து கொள்ளலாம்.


முதலில் சிறுநீரக கற்கள் உங்களுக்கு உருவாகாமல் இருக்க தடுக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும் அத்துடன் சிறுநீரின் நிறம் வெள்ளையிலிருந்து மஞ்சளாக இருந்தால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு போதவில்லை என்று அர்த்தம் அதிகமாக தண்ணீர் குடியுங்கள்.

நமக்கு சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு 600 மி.கிராம் தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி இருந்தால் சிட்ரேட்டின் அளவு குறைவாக இருக்கும் இதற்கு சிட்ரேட் அதிகம் உள்ள எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழச்சாற்றை ஜுஸ் செய்து சர்க்கரை கலக்காமல் அதிகம் பருகினால் கற்கள் வளர்ச்சி அடைவதை தடுத்து விடலாம்.



Popular Feed

Recent Story

Featured News