Friday, September 28, 2018

பிளாஸ்டிக் ஒழிப்பு: பள்ளிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தல்

பள்ளிகளில் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்குவது தொடர்பாக அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மீண்டும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளும் -பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு இல்லாத பகுதி- என்ற அறிவிப்பைச் செய்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.



இதுதொடர்பாக அந்தந்த மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் உறுதிப்படுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular Feed

Recent Story

Featured News