Tuesday, September 4, 2018

மனநலம் குறித்த குறும்படப் போட்டி: படைப்புகள் வரவேற்பு

மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படம், புகைப்படம் மற்றும் சுவரொட்டி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இவற்றுக்கான படைப்புகளை போட்டியாளர்கள் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை அனுப்பலாம்.



மனநல மருத்துவர் டாக்டர் கெளதமாதாஸ் உடுப்பி மற்றும் சென்னை ரோட்டரி சங்கம் இணைந்து, மனநலம் தொடர்பான மனத்தடைகளை நீக்குவது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.

அதன் ஒரு பகுதியாக மன நலம் தொடர்பான குறும்படம், புகைப்பட போட்டி, சுவரொட்டி தயாரிக்கும் போட்டி ஆகியவை நடைபெற உள்ளன. போட்டியில் பங்கேற்போர் தங்கள் படைப்புகளை www.endstigma.in என்ற இணையதளத்துக்கு அக்டோபர் 5 -ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். வெற்றி பெறுவோருக்கு பணப்பரிசு, சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்படும். அக்டோபர் 13 -ஆம் தேதி குறும்படம் திரையிடல், பரிசளிப்பு விழா உள்ளிட்டவை நடைபெறும்.



Popular Feed

Recent Story

Featured News