Friday, September 14, 2018

இந்த ஆண்டு ஒரு கோடி பேர் புற்றுநோயால் இறப்பர்- பகீர் தகவல்

புற்றுநோயால் இந்த ஆண்டு மட்டும் சுமார் 1 கோடி பேர்
இறக்க நேரிடும் என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.



ஆரோக்கியமற்ற உணவு முறை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, புகை பிடித்தல், உடல் உழைப்பு இல்லாமை, காற்று மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. 2018ம் ஆண்டு கணக்குப்படி புற்றுநோயால் சுமார் ஒரு கோடியே 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 1 கோடி பேர் இந்த ஆண்டே உயிரிழப்பர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் 1 கோடியே 40 லட்ச பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக கண்டறியக்கூடிய புற்று நோய்கள் கட்டுப்படுத்தக்கூடியவையாகவே உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்நாளில் ஆண்களில் 5 பேரில் ஒருவருக்கும் பெண்களில் 6 பேரில் ஒருவருக்கும் புற்றுநோய் ஏற்படுகிறது. 21ம் நூற்றாண்டில் புற்றுநோய் மட்டுமே உயிர் கொல்லி நோயாக பார்க்கப்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



புற்றுநோய் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோயை நம்மால் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமாகவும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்கின்றனர் புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவர்கள்.

Popular Feed

Recent Story

Featured News