Monday, September 17, 2018

குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாத பொருட்கள் பற்றி காண்போம்




நம் முன்னோர்கள் கெட்டுப்போகாத உணவுகளை இயற்கை முறையில் செய்து வந்தார்கள் உதாரணத்திற்கு புளியோதரை, எலுமிச்சை ஊறுகாய் மற்றும் இயற்கையாக பெறக்கூடிய தேன் இவை அனைத்தும் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க கூடிய உணவுகளாகும்.

ஆனால் இக்காலத்தில் கெட்டுப் போகாத உணவுகளையும் கெட கூடிய சூழ் நிலைக்கு தள்ள கூடிய அளவிற்கு நம் சமுதாயம் இருக்கிறது. எப்படி என்றால் எளிதில் கெடகூடிய பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பது ஒரு முறையாகும்.

ஆனால் இரண்டு மூன்று நாட்கள் கெடாமல் இருக்கும் உணவுகளையும் குளிர்சாதன பெட்டியில் வைத்து கெட்டுப் போகக் கூடியதாக மாற்றுகிறது மேலும் உடலுக்கு தீமை தரக்கூடிய உணவுகளை மாற்றி நமக்கு தருகின்றது. இருந்தும் பல குடும்பப் பெண்கள் தன் வீட்டில் சீதனமாக குளிர்சாதன பெட்டியை வாங்கிக் கொள்கிறார்கள் வைத்துக்கொண்டு இருக்கிற உணவுகளையெல்லாம் குளிர்சாதன பெட்டியில் ஏற்றுகிறார்கள்.

அவை அனைத்தும் நஞ்சு பொருளாக மாறுகிறது. அது இப்பொழுது நமக்கு தெரியாது பிற்காலத்தில் சில நோய்கள் வரும் போது அதன் ஆணிவேர் என்னவென்று பார்த்தால் தவறான உணவு முறைகள் ஆகும்.

பின்பு குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாத உணவுப் பொருள்களை காண்போம் பழங்களை அறிந்து அப்படியே வைக்கக்கூடாது அதில் நோய்கள் எளிதில் தாக்கக்கூடும் மற்றும் வெங்காயம் ஒரு வாரம் வரை இருக்கும். ஆனால் அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அதை நஞ்சாக்குகிறோம். மேலும் காய்கறிகளை வைக்கும் போது அதை ஒரு கவரில் வைத்து அடைத்து வைக்க வேண்டும்.




இல்லையென்றால் குளிர்சாதன பெட்டியில் உள்ள வேதிப்பொருள்கள் காய்கறிகளைத் தாக்கும் அதே போன்று பல நாள் கெடாத பொருள் தேன் ஆகும். அதையும் குளிர்சாதன பெட்டியில் வைத்து விஷம் ஆக்குகிறார்கள். எனவே எதை வைக்க வேண்டும் எதை வைக்கக்கூடாது என்று தெரிந்துகொண்டு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Popular Feed

Recent Story

Featured News