அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிகளுக்கான பட்டியலில் தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
*இதுதொடர்பாக, சிவசங்கரி உள்ளிட்ட 11 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கான 576 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 2017 -ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்டது*
*இந்த பட்டியலில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர் பணிகளுக்குத் தகுதி இல்லாதவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தனர்*
*இந்த மனு நீதிபதி சத்ருஹான புஜ் ஹரி முன் விசாரணைக்கு வந்தது*
*வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்*
*மேலும் இந்த பணிக்களுக்காக இதுவரை நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்*