Saturday, September 8, 2018

இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்






கல்வி அறிவு கரைசேர்க்கும் : இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்

'ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஏழைகளுக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது' என்ற பாரதியார். ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் 1966 செப்., 8 முதல் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. 'டிஜிட்டல் உலகில் எழுத்தறிவு' என்பது இந்த ஆண்டு மையக்கருத்து.எது எழுத்தறிவுஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர்.

எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.



எழுத்தறிவு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்தான் ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும்.என்ன பயன்எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயம் போன்றது. கல்வி என்பது அறிவு வளர்ச்சி என்ற நிலையையும் தாண்டி அது உலக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம் அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.

Popular Feed

Recent Story

Featured News