Thursday, September 20, 2018

இனிமேல் இன்கம்மிங் கால்களுக்கும் கட்டணம்!! வருவாய் இழப்பை தடுக்க செல் நிறுவனங்கள் அதிரடி !!





அதன்படி இனிமேல் ரீசார்ஜ் செய்யாமல் வெறுமனே இன்கம்மிங் கால்களை பெற முடியாது. அன்லிமிடெட் பேக் இல்லாதவாடிக்கையாளர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ.25க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் கால்களை மேற்கொள்ள இயலும்.அதுவும் 28 நாட்கள் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்பிறகு பின் அவுட்கோயிங் வசதி துண்டிக்கப்படும்.


மீண்டும் அவுட்கோயிங் வசதியை பெற குறைந்த பட்சம் ரூ.25 முதல் அதிக பட்சம் ரூ.495 வரை உள்ள ரீசார்ஜ்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும்..அவ்வாறு ரீசார்ஜ் செய்யாதபட்சத்தில் அடுத்த பதினைந்து நாட்கள் இன்கம்மிங் கால்களை மட்டுமே பெற இயலும். 16வது நாள் இன்கம்மிங் கால்களும் துண்டிக்கப்படும்.


மீண்டும் சேவையை பெற அடுத்த 90 நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்யவேண்டும். இவ்வாறு செய்யாதபட்சத்தில் 90 நாட்களுக்கு பின் உங்கள் மொபைல் எண் முற்றிலும் சேவைநீக்கம் செய்யப்படும் என செல்போன் நிறுவனங்கள் அறிவித்துள்ளன..
நாளைமுதல் வோடபோன் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.விரைவில் ஐடியா,ஏர்டெல் நிறுவனங்களும் இதை பின்பற்றி இதே திட்டங்களை அறிவிக்கவுள்ளன.




ஜியோவின் அதிரடி இலவசங்கள் பின் மக்கள் ஓடியபோதே இதற்கும் சேர்த்து பின்னாளில் நாம் பணத்தை இழக்க வேண்டும் என்று பலர் அன்றே கூறியது இன்று நடைமுறைக்கு வந்துள்ளது.


இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது,அடிமட்ட தொழிலாளர்கள்,வயதான பெரியவர்கள் போன்ற வெறும் இன்கம்மிங் கால்களை மட்டுமே பெரும் நபர்கள்தான். இதையத் தொடர்ந்த பொது மக்களுக்கு செல் போன் நிறுவனங்கள் என்னென்ன ஷாக் கொடுக்க காத்திருக்கிறதோ தெரியவில்லை.

Popular Feed

Recent Story

Featured News