மீண்டும் எளிதில் புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைப் பயன்படுத்தித்தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். ஆனால், உலகமோ தற்போது மாபெரும் குப்பைமேடாக மாறி வருகிறது, பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதைவிட இயற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த செயல்களை உடனே செய்வது, பூமி சீர்கெடும் விகிதத்தை குறைக்க உதவும்.
வீட்டில் சமையல், குளியல் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட நீரைக்கொண்டே மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைத்து நமக்குத் தேவையானவற்றை நாமே விவசாயம் செய்து கொள்ளலாம். அதற்கு இரசாயன சோப்பு, கழுவல் பொடி பயன்படுத்தாமல் இயற்கையான அரப்பு, சீயக்காய், இலுப்பைத்தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் வீட்டுக்கழிவு நீர் வீட்டுத்தோட்டத்திற்கு உரமாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை நுகர்வைக் கடைப்பிடித்து பருவணிலையை பத்திரமாய் எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.
அதற்கு அனைவரும் பசுமை நுகர்வோராய் மாறுவோம். முடிந்த வரை பிளாஸ்டிக்பைகளை /தண்ணீர் பாக்கெட்கள் /மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க ஒவ்வொருவரும் தனக்குள்ளே ஒரு இறுதியான தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும்.