Saturday, September 22, 2018

மாணவர்களுக்கு 'Health Card' திட்டம்

மாணவர் உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளிப்பதற்காக, மத்திய அரசு திட்டத்தில், 'ஹெல்த் கார்டுகள்' வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தில், பள்ளிகளில், டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். பரிசோதனை விபரத்தை பராமரிக்கும் நோக்கில், மாணவ - மாணவியருக்கு, 'ஹெல்த் கார்டு' வழங்கப்படுகிறது.



இதில், மாணவர் பெயர், முகவரி, 'ஆதார்' எண், மாணவர் அடையாள எண், ரத்தவகை, தடுப்பூசி அளித்தல், ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், உடல் எடை விபரம் குறிப்பிட வேண்டும். மாணவியருக்கு, மாதம், மூன்று, 'சானிட்டரி நாப்கின்' வழங்கியதையும், இக்கார்டில் குறிக்க வேண்டும்.

Popular Feed

Recent Story

Featured News