Monday, September 3, 2018

International Observe the Moon Night 2018-InOMN Event Flyer- October 20, 2018

நாசா சர்வதேச நிலா இரவு உற்றுநோக்குதல் நிகழ்வு- 10-10-2018. கல்வி
நிறுவனங்களுக்கு ஆக்டிவிட்டி எஜூகேட்டர், தேசிய கல்வி வள நிறுவனம் அழைப்பு.



வரும் 10-10-2018 அன்று வான்வெளியில் நிலாவில் நிகழும் அறிய நிகழ்வை காண விருப்பமுள்ள கல்வி நிறுவனங்கள் வரும் 03-10-2018 தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

நிகழ்வு ஏற்பாட்டாளர்: ஆக்டிவிட்டி
எஜூகேட்டர், தேசிய கல்வி வள நிறுவனம், பெங்களூர்

யாருக்கு இது உபயோகமாக இருக்கும்:
மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இன் நிகழ்வு அறிவுப்பூர்வமாகவும், வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதாகவும் இருக்கும்.

முன்னுரிமை:
முதலில் பதிவு செய்யும் 20 கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்க உள்ளது.

ஒருநாள் அனுபவ பயிற்சி:
தேர்ந்தெடுக்கப்படும் 20 கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் அவர்களது கல்வி நிறுவன வளாகத்திலேயே ஒருநாள் செயல்முறை பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.



பயன்:

1. இது நாசாவின் சர்வதேச கருப்பொருளை மையமாக கொண்ட செயல் திட்டம்.

2. வானியல், வான்வெளி, அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பாடப்பொருளை மையமாக கொண்டது.

3. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள 51-A-(h) என்ற பிரிவு, அடிப்படை கடமைகளில் அறிவியல் பரப்புதல், அறிவியல் தொடர்பு மூலம் இந்திய நாட்டின் அறிவியல் சார் வளர்ச்சியில் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளதை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் வழிகாட்டுதலின் பேரிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ( Article 51A(H) ‘Promoting scientific temper is a constitutional duty’ )

4. கிராமப்புற, நகர்புற மாணவர்களுக்கு இது ஒரு விசித்திரமான நிகழ்வாக இருக்கும்.

5. இந்த நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்களின் பாடத்திட்டத்தை சார்ந்து இருக்கும்.

6. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைத்து வயதினரும் பல புதிய செய்திகளை தெரிந்துகொள்ளும் வகையிலும், குதுகலமான செயல்பாடுகளை கொண்டதாகவும் இருக்கும்.

7. இந்த நிகழ்வை பெங்களூரில் உள்ள ஆக்டிவிட்டி எஜூகேட்டர், தேசிய கல்வி வள நிறுவனம் ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது.

8. தேர்ந்தெடுக்கப்படும் கல்விநிறுவனங்களுக்கு “நிலாவை உற்றுநோக்குதல்” என்ற தலைப்பில் புத்தகங்கள், DVD, போஸ்டர்கள் வழங்கப்படும்.



9. இந்த நிகழ்வில் பங்கேற்பவர்கள் இயற்பியல்,கணிதம், உயிரியல், புவியியல், வானியல், வான்வெளியியல், மண்ணியல் ,...குறித்த பாடப்பொருள்களையும் தகவல்களையும் பெற இயலும்.

10. சிறந்த வாழ்நாள் அனுபவமாகவும், வாழ்க்கைக்கு உதவும் அரிய செயல்பாடுகளையும் செய்திகளையும் கொண்ட நிகழ்வாகவும் இருக்கும்.

இலவசம் :
இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை.

இது அறிவியல் பரப்புதல், அறிவியல் தொடர்பு செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் அறிந்துகொள்ளவேண்டியதாக இருப்பதாலும், இந்திய அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 51-A-(h) இந்திய அரசியல் அமைப்பு கடமைக்கு உட்பட்டு முற்றிலும் இலவசமான செயல்பாடாக வழங்கப்படுகிறது.

சான்றிதல்:
சிறப்பாக பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதல் வழங்கப்படும்.

தொடர்புகொள்ள ஈமெயில் முகவரி: activityeducator@gmail.com

முகநூல் முகவரி: https://www.facebook.com/groups/ISCOPE/

பதிவு செய்ய இறுதி நாள் 03-10-2018 புதன்கிழமை

பதிவு செய்ய, விபரம் பெற, மற்றும் புதிய தகவல்களுக்கு, கீழே உள்ள கூகிள் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பவும்

https://goo.gl/forms/d50zbn7kQ1wIjI9w2



Popular Feed

Recent Story

Featured News