Friday, September 14, 2018

புதிய Iphone ன் மேஜிக் சிம்!






ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன்களான iPhone XS, iPhone XS Max, iPhone XR மூன்று மாடல்கள் நேற்று வெளியானது. இதில் முதன்முறையாக டூயல் சிம் மற்றும் டூயல் standby வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



ஒவ்வோர் ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் அதன் ஐ-போனுடன் புதிய தொழில்நுட்பங்கள் பலவற்றையும் அறிமுகம் செய்யும். பின்பு மற்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் அதனை அப்படியே காப்பி அடித்துக்கொள்ளும். உதாரணமாக ஃபிங்கர் பிரின்ட் சென்சார், முக அங்கீகாரத் தொழில்நுட்பம் இப்படி பலவற்றைச் சொல்லலாம். ஆனால், தற்போது முதன்முறையாக சீன நிறுவனங்கள் உருவாக்கிய டூயல் சிம் தொழில்நுட்பத்தை ஆப்பிள் பின்பற்றியுள்ளது. ஆனால், முழுமையாக காப்பி அடித்துள்ளது என்று கூற முடியாது. ஏனெனில் அதில் புரட்சியை ஏற்படுத்தும் இ-சிம் எனும் ஒரு தனித்துவத்தைப் புகுத்தியுள்ளது.

இ-சிம் என்றால் என்ன?

ஆப்பிளில் டூயல் சிம் என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ள இந்த மூன்று ஐ-போன் மாடல்களிலும் இரண்டாவது சிம்முக்கு ஸ்லாட் இருக்காது. காரணம் இந்த போனின் மதர்போர்டில் இ-சிம்முக்கான வசதி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மொபைல் ஆபரேட்டர்கள் நேரடியாகப் பயனர்களின் போனை அடைய முடியும் என்பதால் இதில் இரண்டாவது சிம்முக்கான ஸ்லாட் தேவைப்படுவதில்லை.

இ-சிம்மை எப்படி செயல்படுத்துவது?

* ஐ-போனின் செட்டிங்ஸில் செல்லூலர் ப்ளான் ஆப்ஷனில் சென்று Add Cellular Planஐ தேர்வு கொள்ள வேண்டும்.
* மொபைல் ஆபரேட்டர்கள் சிம்கார்டுக்குப் பதிலாக QR Code ஒன்றை வழங்குவர். அதனை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் இ-சிம்மை ஆக்டிவேட் செய்ய மொபைல் ஆபரேட்டர்களிடமிருந்து confirmation code ஒன்று வரும். அதனை உள்ளீடு செய்ய வேண்டும். இப்போது இ-சிம் கார்டு பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும்.

ஆப்பிள் நிறுவனத்தின் Support pageஇல் கிடைத்துள்ள தகவலின்படி ஒரே நேரத்தில் பிஸிக்கல் சிம் மற்றும் இ-சிம் இரண்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த இ-சிம்மை வேறு நம்பர்களுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த இ-சிம்மை நம் விருப்பத்துக்கேற்ப primary மற்றும் secondary சிம்மாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
ஆப்பிள் ஐ-போனின் இந்திய விலை





Popular Feed

Recent Story

Featured News