Wednesday, September 26, 2018

ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (SSA + RMSA ) : அதிகாரிகளுக்கு பயிற்சி

தமிழகத்தில் இதுவரை தனித்தனி திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வந்த ‘அனைவருக்கும் கல்வி’ திட்டமும் (எஸ்எஸ்ஏ), மத்திய இடைநிலை கல்வி திட்டமும் (ஆர்எம்எஸ்ஏ) இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் (சமக்ர சிக்சா அபியான்-எஸ்எஸ்ஏ) என்ற பெயரில் நடை முறைப்படுத்தப்படுகிறது.



இப் புதிய திட்டத்தை செயல்படுத் துவது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஒருநாள் பயிற்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியை பள்ளிக்கல்வித் துறையின் முதன் மைச் செயலர் பிரதீப் யாதவ் தொடங்கிவைத்தார்.

இதில், எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்கு நர் சுடலைகண்ணன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ் வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்வி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்ட அதிகாரிகள் புதிய திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனர்



Popular Feed

Recent Story

Featured News