Friday, October 26, 2018

'குரூப் - 1' தேர்வு முடிவு எப்போது?

துணை கலெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான, 'குரூப் - 1' தேர்வு நடத்தி, ஓராண்டு முடிந்தும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.



தமிழக அரசு துறையில், 29 துணை கலெக்டர்கள், 34 டி.எஸ்.பி.,க்கள் மற்றும் வணிக வரி உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், 85 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 1 தேர்வு அறிவிக்கப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 1 முதல்நிலை தேர்வு, 2017, பிப்.,யில் நடத்தப்பட்டது. 

இதில், 1.38 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள், ஆகஸ்டில் வெளியிடப்பட்டு, 4,602 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, மெயின் தேர்வு என்ற பிரதான தேர்வு, 2017, அக்., 13 முதல், 15 வரை நடந்தது. தேர்வு முடிந்து, ஓராண்டாகியும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

'தேர்வு முடிவு, செப்., கடைசி வாரம் வெளியிடப்படும்' என, தோராய தேதியையும், ஐந்து மாதங்களுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. செப்., முடிந்தும், இன்னும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. 



முடிவுகள் தயாராகி விட்ட நிலையில், அரசின் ஒப்புதலுக்காக, டி.என்.பி.எஸ்.சி., காத்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: இந்த தேர்வின் முடிவு வந்த பின், தேர்ச்சி பெறுவோர் நேர்முக தேர்வில் பங்கேற்பதற்கும் பயிற்சி எடுக்க வேண்டும்.

அதேபோல, தேர்வு முடிவு தாமதமாவதால், வயது வரம்பு அதிகரித்து, வேலைவாய்ப்பு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே, அரசின் தலையீடு எதுவும் இன்றி, தேர்வு முடிவை விரைந்து வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்



Popular Feed

Recent Story

Featured News