எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள இரண்டாயிரம் செவிலியர்
காலிப்பணியிடங்களுக்கு வரும் 8-ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போபால், ஜோத்பூர் ஆகிய இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் தலா 600 காலிப்பணியிடங்களும், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 500 காலிப்பணியிடங்களும், ராய்ப்பூரில் 300 காலிப்பணியிடங்களும் உள்ளன. பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் பயின்ற 30 வயதுக்குட்பட்டவர்கள், வரும் 8-ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எய்ம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளமான www.aiimsexams.org என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது. எழுத்துத்தேர்வின் வாயிலாக மட்டும் செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு வரும் 8-ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.