Tuesday, October 30, 2018

2017-ல் நடந்த மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு ரத்தாக வாய்ப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.




மத்திய அரசின் 3 மற்றும் 4-ம் நிலை ஊழியர்களுக்கான தேர்வு இரு கட்டகங்களாக கடந்த 2017-ம் ஆண்டு, பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. சுமார் 2 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்ற தேர்வில், முன்கூட்டியே கேள்வித்தாள் வைத்திருக்கும் பொறுப்பாளர்களே அதை கசிய விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து தேர்வர்கள் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து வழக்கு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட்டது.



இது தொடர்பான வழக்கில், முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி தேர்வு முடிவுகளை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்திருந்தது. திங்களன்று நடந்த விசாரணையில், முறைகேட்டால் பலனடைந்த குற்றவாளிகளைப் பிடிக்காதது குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன



Popular Feed

Recent Story

Featured News