Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 28, 2018

25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள ஓடைதூர்வாரப்பட உள்ளதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் உள்ளனர். 

தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பண்ணிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு ஆடிட்டர் படிப்பிற்கு தமிழகத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பின்னர், அவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களைக் கொண்டு முதன்மைத் தேர்வு எழுத பயிற்சியளிக்கப்படும்.



தமிழகத்தில் 52 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் துவக்கப்பட உள்ளன.

இதற்கு தாய்மொழிதான் முன்னுரிமை அளிக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில் வழியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்பினால் ஆங்கில வழி கல்வியும் கற்றுத் தரப்படும். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் செயல்படும் இந்த அரசு இருமொழி கொள்கையைப் பின்பற்றும்.

பள்ளிகளில் மாணவிகள் பாலியில் தொந்தரவுக்கு ஆளானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



Popular Feed

Recent Story

Featured News