Tuesday, October 9, 2018

சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறும் வோகயர்2! நாசா தகவல்..!

விட்டு விலக வேண்டுமா? விட்டுவிட்டு ரொம்பதூரம் செல்ல வேண்டுமா? இதில் வோகயர்2 உங்களை தோற்கடித்துவிடும். அக்டோபர் 5 அன்று நாசா வெளியிட்ட தகவலின் படி, 1977ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலனானது, சூர்ய குடும்பத்தின் விளிம்பை நோக்கி பயணித்துகொண்டிருக்கிறது.







இந்த அறிவிப்பானது தற்போது நடைபெற்று வரும் இரு காரணிகளை அடிப்படையாக கொண்டுள்ளது. அவை என்னவெனில், எவ்வளவு காஸ்மிக் கதிர்கள் - அதிவேக பொருட்கள் வெளிப்புற விண்வெளியில் இருந்து சூர்யகுடும்பத்தில் நுழைந்து விண்கலத்தை தாக்குகின்றன என்பது சிறிதளவு உயர்ந்துள்ளது என ஆகஸ்ட் மாத கடைசியில் கண்டறியப்பட்டது.இதே போன்ற ஒரு சூழ்நிலை 2012ல் வோகயர்1 விண்கலம் தனது செயல்பாட்டை நிறுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்டது. ஆனால் இது நடைபெறுவதற்கு முன்பாகவே அதன் மைல்கல்லை கண்டறிய ஆராய்ச்சியாளர்களால் முடியவில்லை .






இது தொடர்பாக கருத்துதெரிவித்துள்ள வோகயர் திட்ட ஆராய்ச்சியாளர் எட் ஸ்டேன், "வோகயர்2 விண்கலத்தின் சுற்றுபுறத்தை மாற்றங்கள் சந்தித்து வருகிறோம். அதில் சந்தேகமே இல்லை . வரும் மாதங்களில் ஏராளமான படிப்பினைகள் நமக்கு காத்திருக்கின்றன. ஆனால் எப்போது விண்கலம் ஹீலியோஸ்பியரின் எல்லையான ஹீலியோபாஸை அடையும் தெரியவில்லை. இன்னும் அந்த பகுதியை அடையவில்லை என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்" என்றார்.

வோகயர்2 விண்கலம் தற்போது பூமியிலிருந்து 11 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது என்பது வோகயர்2 குழுவிற்கு தெரியும். ஆனால் எப்போது இந்த விண்கலம் ஹீலியோபாஸ் எனும் பகுதியை கடந்து சூரியகுடும்பத்திற்கு வெளியே செல்லும் என்பதை கணிப்பது மிகவும் கடினமானது.

ஹீலியோபாஸ் எனப்படும் சூர்யகுடும்பத்தை சுற்றியுள்ள குமிழியானது, சூரியனில் இருந்து தொடர்ச்சியாக வெளிவரும் கதிர்களாலான சூரிய புயலால் உருவானது. ஆனால் சூரியனின் 11ஆண்டுகால சுழற்சியில் தொடர்ந்து சூரியபுயல்கள் சுழன்று வருகின்றன. அதாவது சூர்யகுடும்பத்தை சுற்றியுள்ள இந்த குமிழியானது தொடர்ந்து விரிவடைந்துகொண்டே உள்ளது.

மேலும் வோகயர்2 விண்கலம் தனது முன்னோடி விண்கலத்தின் பாதையை துல்லியமாக பின்பற்றாத காரணத்தாலும்,காஸ்மிக் வெளியேற்றத்தாலும் இது வழங்கும் தரவுகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். எனவே வோகயர்2 விண்கலம் ஹீலியோபாஸை கடக்கும் வரை, அது எந்த இடத்தில் பயணிக்கிறது என்பதை துல்லியமாக கணிக்கமுடியாது.



வோகயர்2விண்கலம் எப்போது சூர்யகுடும்பத்தை விட்டு வெளியேறினாலும், அது அவ்வாறு செய்த மனிதனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது பொருள் என்ற பெயரை பெறும்.

Popular Feed

Recent Story

Featured News