Monday, October 8, 2018

அமேசானில் தற்காலிகமாக 50,000 பணிகள்!


பண்டிகைக் காலக் கூடுதல் விற்பனையைச் சமாளிக்கும் விதமாக 50,000 பேரை தற்காலிகமாக இணைக்க அமேசான் இந்தியா திட்டமிட்டுள்ளது.



ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் உலகின் முதன்மையான நிறுவனமாகவும், இந்தியாவின் இரண்டாவது நிறுவனமாகவும் அமேசான் விளங்குகிறது. இந்தியாவில் தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக் காலம் தொடங்கவுள்ளதால் கூடுதல் விற்பனையை எதிர்கொள்ள கூடுதலாக 50,000 பேரை தற்காலிகமாக நியமிக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் விற்பனைக்குத் தயாராகும் விதமாக 50 பொருட்கள் நிரப்பும் மையங்கள் மற்றும் 150 விநியோக நிலையங்களை நாடு முழுவதும் அமைக்கவுள்ளது.



இதுகுறித்து அமேசான் நிறுவனத்தின் இந்தியத் துணைத் தலைவர் (இந்தியா வாடிக்கையாளர் நிறைவேற்றம்) அகில் சக்சேனா டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “இந்தப் பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்கவுள்ளோம். பண்டிகைக்கால விற்பனையைச் சிறப்பாக மேற்கொள்ள எங்கள் அணியை இரு மடங்கு அதிகமாக்க திட்டமிட்டுள்ளோம். கூடுதலாக சுமார் 50,000 பேர் வரை பண்டிகைக் கால விற்பனைக்காக இணைக்கப்படுவர்” என்றார்.

Popular Feed

Recent Story

Featured News