Tuesday, October 30, 2018

`காற்று மாசுபாட்டால் வருடத்துக்கு 6 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன' - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!


ஒவ்வொரு வருடமும் 15 வயதுக்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகள் அசுத்தமான காற்றால் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 93 சதவிகிதம் அதாவது 1.8 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 630 மில்லியன் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்று காரணமாகக் குறைந்த சுவாச நோயால் இறந்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு மோசமான விளைவாகும். தினம் தினம் மாசுபடும் காற்றானது, குழந்தைகளின் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறது.

Popular Feed

Recent Story

Featured News