Friday, October 12, 2018

அரசு பள்ளி மாணவர்களுக்கு உலக அளவில் செஸ் போட்டி: அமைச்சர் தகவல்...!!

அரசுப் பள்ளி மாணவர்கள் உலக அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கேற்க அரசு ஏற்பாடு செய்யும்,’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான சதுரங்க போட்டிகளை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார்.



அப்போது அவர் கூறியதாவது: அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நடைபெறும் இந்த மாநில அளவிலான செஸ் போட்டி இன்று மாலையே முடிகிறது.

இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இதுபோன்ற போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலும், உலக அளவிலும் நடைபெறும் செஸ் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.



முதல்வரிடம் அனுமதி பெற்று விரைவில் அதற்கான அனுமதியும், உத்தரவும் வெளியிடப்படும். இது போன்ற போட்டிகள் மாணவர்களின் அறிவை கூர்மையாக்கும்.

விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் 2 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News