Saturday, October 6, 2018

இனி டிவி வேண்டாம்; மொபைல் போன் போதும்

டிவி வேண்டாம்; மொபைல் போன் போதும்!  காணொளிகளைக்   கண்டுகளிப்பதற்கு  டிவியை விட மொபைல் போன்களையே இந்தியர்கள் அதிகம் விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.



லைம்லைட் நெட்வொர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியர்கள் ஒரு வாரத்துக்குச் சராசரியாக 8 மணி நேரம், 28 நிமிடம் ஆன்லைனில் காணொளிகளைக் கண்டுகளிப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், டிவியில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதற்கு ஒரு வாரத்துக்கு 8 மணி நேரம், 8 நிமிடம் மட்டுமே செலவிடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. சர்வதேச அளவில் காணொளிகளைக் கண்டுகளிப்பதற்கு ஒரு வாரத்துக்கு ஆறு மணி நேரம், 45 நிமிடங்களைச் செலவிடுவதாகவும், இந்த சர்வதேசச் சராசரி 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் 58 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. ஆன்லைன் சேனல்கள் வாயிலாகத் திரைப்படங்கள், செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை இந்தியர்கள் அதிகம் கண்டுகளிக்கின்றனர்.



இந்தியாவில் டேட்டாவுக்கான செலவுகள் மிகவும் குறைந்துள்ளதால் இந்தத் துறை மேலும் வலுவடையும் என்று எதிர்பார்ப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆன்லைனில் காணொளிகளைக் காண ஒரு வாரத்துக்கு எட்டு மணி நேரம், 46 நிமிடங்களைச் செலவிடுகின்றனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. உலகிலேயே குறைந்தபட்சமாக ஜெர்மனியில் 5 மணி நேரம், 2 நிமிடங்கள் செலவிடப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News