Thursday, October 11, 2018

மூட்டு வலியை குணப்படுத்தும் எண்ணெய்கள்

மூட்டு வலிகளை குணப்படுத்த காலங்காலமாக  சில ஆயுர்வேத எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது




ஆர்திரிடிஸ் நோயில் ஒருவகை தான் கீல்வாதம். கால் மூட்டை சுற்றி சோடியம் யூரேட் தங்கிவிடுவதால் வீக்கம், வலி போன்றவை ஏற்படுகிறது. பொதுவாக இந்த வலியானது கணுக்கால் மூட்டில் தான் ஏற்படும். சில நேரங்களில் சிலருக்கு முழங்கை மூட்டு, கட்டைவிரல், காதுமடல் மற்றும் மணிக்கட்டில் வரக்கூடும்.

இதன் அறிகுறி ஒரேநாளில் தொடங்கி, இதன் விளைவு 10 நாள் வரை இருக்கும். மூட்டு வலிகளை குணப்படுத்த காலங்காலமாக சில ஆயுர்வேத எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூட்டு வலிக்கு எசன்ஷியல் ஆயில்களை பயன்படுத்துவதன் மூலம் மூட்டுகளில் தங்கி இருக்கும் யூரிக் அமிலத்தின் துகள்கள் உடைக்கப்பட்டு மூட்டு வலி குறைக்கப்படுகிறது.



ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்யில் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஆன்டிஇன்ப்ளமேட்டரி தன்மை உண்டு என்பதால் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இரசாயனம் சேர்க்கப்பட்டு அல்லது மெஷின்களில் தயாரிக்கப்பட்டதை விட பாரம்பரிய முறையில் எண்ணெய்யை பிரித்தெடுக்கும் பொது அதன் நன்மைகள் ஏராளமாக இருக்கும். இதில் பாலிபீனால் ஓலியோகேந்தல், ஓலிரோபின், ஹைடிராக்சிடைரோசல் மற்றும் லிக்னன்ஸ் இருப்பதால் முடக்கு வாதத்தால் உண்டாகும் மூட்டு வலி குறையும்.

லெமன் எசன்ஷியல் ஆயில்

சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருப்பதோடு மூட்டு வலியையும் குறைக்கும் தன்மை இந்த எண்ணெய்க்கு உண்டு. தினமும் குடிநீருடன் இந்த எண்ணெய்யை கலந்து குடித்து வர மூட்டு வலி குணமாகும். மூட்டில் அமிலத்தை குறைத்து, உடலின் PH அளவை சீராக வைத்திருக்கும். தினமும் இதனை மூட்டில் தேய்த்து வர வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு வலியில் இருந்து தப்பலாம்.
அவகாடோ ஆயில்



இளம்பச்சை நிறத்தில் இருக்கும் இந்த எண்ணெய் பக்கவாதம் மற்றும் இருதயம் நோய்களின் அபாயத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். மேலும் இந்த எண்ணெய்யில் ஆன்டிஇன்ப்ளமேட்டரி தன்மை உள்ளது மற்றும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்த கூடிய c ரியாக்டிக் புரதத்தை குறைக்கும். வைட்டமின் ஈ நிறைந்திருக்கும் இந்த எண்ணெய் ஆன்டிஆக்சிடன்ட் தன்மை கொண்டது.

ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில்

சமையலுக்கு, சுத்தம் செய்வதற்கு மற்றும் உடல் உபாதைகளுக்கு பெரிதளவு பயன்படுத்தப்படும் இந்த ரோஸ்மேரி எசன்ஷியல் எண்ணெய்யில் வலியை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. சருமத்தில் தேய்க்கும் போது சருமத்திற்கு இதமாக இருக்கும். இதில் ஆன்டிபாக்டீரியால், ஆன்டிஆக்சிடன்ட், ஆன்டிஆர்த்ரிட்டிக் மற்றும் அனல்ஜெஸீக் தன்மை இருப்பதால் தசையில் இறுக்கம், மூட்டு வலி, முடக்கு வாதம் போன்றவை குணமாகும்.



உடனடியாக வலிக்கு நிவாரணம் கிடைக்க விளக்கெண்ணெயுடன் இரண்டு அல்லது மூன்று எசன்ஷியல் ஆயில்களை ஒன்றாக சேர்த்து தேய்த்து வரலாம்.

Popular Feed

Recent Story

Featured News