Sunday, October 28, 2018

அனைத்து பள்ளிகளுக்கும் இன்டர்நெட் வசதி, ஆசிரியர்களுக்கு லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன்

ஜன., மாதம் இறுதிக்குள், நிதியளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனால், 11.12 லட்சம் மாணவர்கள், டேப் மூலம் பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ளலாம்




ஜன., மாதத்தில் 52 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி, முதல்வரின் ஒப்புதலோடு, எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகள் கொண்டு வரப்படும். டிச., மாதம் இறுதிக்குள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த, 11.17 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்

இதே வகுப்பினருக்கு ஜன.,மாதம் முதல் வாரத்தில் லேப்டாப் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க, வேண்டுகோள் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்



திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில், அனைத்து பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதிக்கு, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Popular Feed

Recent Story

Featured News