Friday, October 26, 2018

உடைந்த எலும்பை இணைக்கும் தன்மை இதற்கு உண்டு!!!




எலும்புத் தொடர்பான பிரச்சினைகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச்சுற்றிப் பரவலாக நிறைய மூலிகைச் செடிகள் இருக்கின்றன. அதாவது தானே வளர்ந்து இருந்தாலும் சில மருத்துவ குணங்களை உடைய மூலிகைகள் நமக்கு மிகவும் பயன்படுவதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட மூலிகைச் செடிகளை அடையாளம் கண்டுகொள்வோம்.

அப்படி ஒரு செடி தான் அருவதா என்றும் சதாப்பு இலைச் செடி என்றும் அழைக்கப்படும்.

அருவதா மருத்துவப் பயன்கள்

அருவதா இலைகள் மூட்டுவலிகளைக் குணப்படுத்தும் தன்மை மிக்கது.



சுளுக்கு, தசைப் பிடிப்பு மற்றும் எலும்பு முறிவுகளை சரிச் செய்யும். உடல் வலிகளை

மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வாக அமைகிறது. இது மட்டுமல்லாமல் இன்னும் சிலர் பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்தாக அமைகின்றது. இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கீரையைப் போல கடைந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் மூட்டு வலிக் கோளாறுகளை சரிசெய்து இதயத்தை காக்கும், உடல் சூட்டை தணிக்கும். அருவதா இலைகளைச் சேகரித்து அவற்றை சிறிது நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீர் சுண்டி வந்ததும் ஆறவைத்துத் தினமும் இருவேளை அல்லது மூன்று வேளை பருகி வர மூட்டு வலி சரியாகும்.

முதுகுத் தண்டுவட வலி மற்றும் முதுகு வலிகளை குணமாக்கும்

உடைந்த எலும்புகள் விரைவில் சேர வைத்து எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும்.



Popular Feed

Recent Story

Featured News