Join THAMIZHKADAL WhatsApp Groups
நம்முடைய அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடலுக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு நன்கு தூளாக்கி, தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ஒன்றில், “காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. அதாவது காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.
எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் எல்லா வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய முக்கியமான பொருள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்