டெங்கு, சிக்குன்குனியா நோய்களை பரப்பக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் தான் ஜிகா வைரஸையும் பரப்புகிறது. பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருந்தாலும், தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது.
ஜிகா வைரஸ் குறித்த சில தகவல்கள்:
* ஜிகா வைரஸ் வெப்பமண்டல காலநிலை உள்ள பகுதிகளில் வேகமாக பரவும்.
* ஜிகா வைரஸ் அறிகுறிகள் 1 வாரத்துக்கு நீடிக்கலாம். ஆனால் கருவில் உள்ள குழந்தைக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
* தற்போதைக்கு ஜிகா வைரஸை குணப்படுத்தும் மருத்துவம் கிடையாது.
அறிகுறிகள்:
* தலைவலி
* முதுகுவலி
* உடல் சோர்வு
* கண் சிவத்தல்
* தடிப்புக்கள்
* மூட்டு வலி
* கண்களுக்கு பின்னால் வலி
* வாந்தி
* தசை வலி
போன்ற அறிகுறிகள் இருக்கும். காய்ச்சல் வந்தவுடனே மருத்துவரை அணுக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பரவும் வழிகள் மற்றும் ஆபத்துக்கள்:
இந்த ஜிகா வைரஸ் பெரும்பாலும் கொசுக்கடி மூலமாகத்தான் பரவுகிறது. இருந்தாலும் ஜிகா வைரஸ் வேறு சில வழிகள் மூலமாகவும் பரவும்.
* தாயிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைக்கு பரவும்.
* செக்ஸில் ஈடுபடுவதன் மூலம்
* வைரஸ் பாதிக்கப்பட்ட ரத்த மாற்றத்தின் மூலமாக அதிகம் பரவிவருகிறது.
தடுக்கும் முறைகள்:
தமிழகத்தில் வெப்பம் அதிகம் என்பதால், ஜிகா வைரஸ் தாக்குதல் குறைவு தான் என கூறப்படுகிறது.
* வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும் * * கர்ப்பிணி பெண்களை ஜிகா வைரஸ் தாக்கினால், குழந்தையும் பாதிக்கப்படும் என்பதால் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கண்டறியும் வழிகள்:
ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அனுகிபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்பிணி பெண்கள் மருத்துவரிடம் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் கண்டறியலாம்.