Saturday, October 27, 2018

காய்ச்சல் பாதிப்பு பள்ளிகளில் கணக்கெடுப்பு।

சென்னை, :பள்ளிகளில், டெங்கு மற்றும் காய்ச்சல் பாதித்த மாணவர்களை கணக்கெடுக்குமாறு,  பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



தென் மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இதனால், பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரவாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டங்களில், டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. காய்ச்சல் இருக்கும் மாணவர்கள், பள்ளிக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், காய்ச்சல் பாதித்த மாணவர்களின் பட்டியலை, சுகாதார துறை சேகரித்து வருகிறது. இதன்படி, பள்ளிகளில் காய்ச்சல் பாதித்த மாணவர்கள் மற்றும் திடீர் நோய் தாக்கம் ஏற்பட்ட மாணவர்கள் இருந்தால், அவர்களை ஆய்வு செய்ய, சுகாதார துறைக்கு அனுமதி அளிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News