Monday, October 8, 2018

அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி: அம்பானி!





அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி: அம்பானி

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிவேக இணைய இணைப்பு வசதி அளிக்க ரூ.4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் சூறாவளியையே ஏற்படுத்தியிருக்கிற முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 2,385க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அதிவேக இணைய இணைப்பு வசதிகள் அளிக்க முடிவெடுத்துள்ளது. இதற்காக ரூ.4,000 கோடியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



உத்தராகண்டில் அக்டோபர் 7ஆம் தேதி நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முகேஷ் அம்பானி, “சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிற தொழில்கள் மற்றும் நிறுவனங்களை ஜியோ ஊக்குவிக்கும். தேவபூமியாக இருக்கிற உத்தராகண்டை டிஜிட்டல் தேவபூமியாக மாற்றுவோம். ஜியோவால் உத்தராகண்டின் சுற்றுலாத் துறை நிலையான வளர்ச்சி பெறும். சுகாதாரத் துறை, கல்வி மற்றும் அரசு சேவைகள் விநியோகத்தை ஜியோ மேம்படுத்தும்.

உத்தராகண்டில் உள்ள 2,185 அரசுப் பள்ளிகள் மற்றும் 200க்கும் அதிகமான கல்லூரிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இணைய இணைப்புகளை வழங்குவோம். இதன்மூலம் மக்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகளும், வருவாயும் கிடைக்கும். உத்தராகண்ட் மக்களுக்குத் தரமான டிஜிட்டல் சேவைகளை வழங்க வேண்டுமென்பதில் ஜியோ உறுதி பூண்டுள்ளது” என்றார்.



Popular Feed

Recent Story

Featured News