Thursday, October 11, 2018

எம்.ஜி.ஆர். நினைவுப் போட்டிகள்: பள்ளி- கல்லூரி மாணவர்களுக்குப் பரிசு

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.



சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்- ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவியருக்கான ஓவியம், பேச்சு, கட்டுரை, மெளன நடிப்பு, ரங்கோலி, கவிதை ஆகிய போட்டிகள் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றன. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இடைநிலை (6-8 வகுப்பு), மேல்நிலை (9-12 வகுப்பு) மற்றும் கல்லூரி என மூன்று பிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளும், ஐந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசுகளை திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் வழங்கி சிறப்புரையாற்றினார். 



முன்னதாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ. விசயராகவன் போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசினார். இதில் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியின் தாளாளர் லதா ராஜேந்திரன், டீன் அபிதா சபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News