Sunday, October 7, 2018

இன்டர்நெட் சேவை குறைந்த வேகத்திலேய கிடைப்பதால், ஆசிரியர்கள், மரத்தின் மீதேறி டேப்லெட்டில் வருகையை பதிவு செய்யும் சம்பவம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது!!!!


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், இன்டர்நெட் சேவை
குறைந்த வேகத்திலேய கிடைப்பதால், ஆசிரியர்கள், மரத்தின் மீதேறி டேப்லெட்டில் வருகையை பதிவு செய்யும் சம்பவம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.



ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவடத்தில் உள்ள ஷோரி காஷ் கிராமத்தில், மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு, ஞானோதயா திட்டத்தின் கீழ், ஆசிரியர்கள் தங்களது வருகையை பதிவு செய்ய டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த டேப்லெட்டில், இ-வித்யா வாகினி ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலமாகவே, ஆசிரியர்களின் வருகைப்பதிவு சர்வருடன் இணைக்கப்படுகிறது. இந்த டேப்லெட்டுகளுக்கு 2ஜி இணைய சேவையே வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த வேக இணைய சேவை :

ஷோரி காஷ் கிராமத்தில் இயங்கிவரும் பள்ளியில், சரிவர இணையசேவை கிடைக்காததால், ஆசிரியர்களின் வருகை தாமதமாகிறது. இதற்காக, இணையசேவையை பெறும் பொருட்டு, ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் மீது தினமும் ஏறி, வருகையை, டேப்லெட்டில் பதிவு செய்கின்றனர். 



அந்த குறைந்த வேகத்திலான இணைய வசதியும் குறைந்த நேரத்திற்கே கிடைப்பதால், மற்ற ஆசிரியர்கள் தற்போதும் ரிஜிஸ்டரில் எழுதியே, தங்களது வருகையை பதிவு செய்கின்றனர்.

கோரிக்கை :

பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள டேப்லெட்டுகளுக்கு, அதிகவேக இணையதள வசதி வழங்கிட மாநில அரசிற்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Popular Feed

Recent Story

Featured News