Sunday, October 7, 2018

மின்னல் தாக்கும் போது செய்யக்கூடியவை., செய்யக்கூடாதவை.!!

மின்னல் என்பது மழைக்காலங்களில் வரும் என்பதை நாம் அறிவோம். இந்த மின்னலானது மழை காலங்களில் புயலின் சக்தியைக் கொண்டு அந்தந்த பகுதிகளுக்கேற்ப அதிகமாகவும் குறைவாகவும் தாக்கும்.



மின்னல் என்பது இயற்கை பேரிடர்களில் பயங்கரமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நொடியில் ஊரையே எரிக்கும் வலிமை கொண்டது. மின்னல் ஒரு நொடிக்கு 50 முறை முதல் 100 முறைவரை பூமியினை தாக்கவல்லது.



ஒரு முறை தாக்கும் மின்னலின் அளவு நூறு மில்லியன் வாட்ஸ் அதாவது அதனால் ஏற்படும் வெப்பத்தின் அளவானது ஏறத்தாழ 30,000 டிகிரி செல்சியஸ் ஆகும்.

மின்னல் ஏற்படும் பொது நாம் என்னனென்ன செய்ய வேண்டும் மற்றும் என்னனென்ன செய்யக்கூடாது என்பதைப்பற்றி நாம் அறிவோம்.

மின்னல் ஏற்படும் போது நாம் செய்ய வேண்டியவை.,

குகைகள், அகழிகள், கட்டிடங்கள் மற்றும் பள்ளமான மறைவு பகுதியில் இருக்கலாம்.

மின்சாரம் கடத்தும் பொருட்களை தவிர்ப்பது நல்லது.



அலைபேசி மற்றும் தொலைக்காட்சியில் ஏதேனும் கண்டுகொண்டிருந்தால் அதனை தவிர்த்து தொலைக்காட்சிப்பெட்டிகளின் பொத்தான்களை அணைத்து மின்சாரத் தொடர்பை தொலைக்காட்சியில் இருந்து நீக்க வேண்டும், மேலும் அலைபேசியை அணைத்து வைப்பது நல்லது.

மரங்கள் அதிகமாக இருக்கும் இடம் மற்றும் மைதானங்களில் நாம் இருக்கும் பொது மின்னல் தக்க தொடங்கினால் அந்த பகுதியை விட்டு உடனடியாக வெளியேறுவது நல்லது.






மின்னல் ஏற்படும் போது நாம் செய்ய கூடாதவை.,

மரங்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் மின்னல் தக்க வாய்ப்புள்ளதால் அந்த பகுதியில் இருந்து புறப்படுவது நல்லது., மின்சாரம் கடத்தும் பொருட்களை நாம் அணிந்திருப்பது, அல்லது அது சம்மந்தமான வேலைகளை (மின்சாரத்தால் இயங்கும் பொருட்களை) பார்ப்பது அல்லது உபயோகிப்பது போன்ற செயல்கள் செய்யக்கூடாது.

மின்னல் தாக்குவதற்கு முன்னர் சில சமிக்கைகளான உடல் ரோமம் சிலிர்த்தல் போன்ற சைகைகள் ஏற்பட்டால் அங்கிருந்து ஓடுவது போன்ற செயல்களை செய்யாமல் அங்கயே நமது உடல் பாகங்களை ஆடையால் மறைத்து அங்கேயே அமர்வது நல்லது.

நீர் நிறைந்த பகுதிகளில் இருக்கும் போது மின்னல் தாக்க போவது போல தெரிந்தால் அங்கிருந்து விரைவாக நிலப்பகுதிக்கு வருவது நல்லது.
மழை காலங்களில் உயரமான மலைப்பகுதிகள் மற்றும் செங்குத்தான மலைப்பகுதியை தவிர்ப்பது நல்லது.




உயர் மின்னழுத்த கோபுரங்கள் மற்றும் மின்சார டிரான்ஸ்பார்மர் போன்றவற்றை தவிர்த்து தள்ளி நிற்பது நல்லது.

Popular Feed

Recent Story

Featured News