Monday, October 29, 2018

குழந்தைகளை குஷிப்படுத்த வந்தாச்சு... பிளையிங் பலூன், கலைடாஸ்கோப் புதிய வகை பட்டாசுகள் அறிமுகம்





சிவகாசியில் 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படும். 

இதன்படி இந்தாண்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் அனைத்து தரப்பினரையும் குஷிப்படுத்தும் வகையில் பல வகையான புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.கம்பி மத்தாப்பில் இந்தாண்டு சிவப்பு, பச்சை நிறம் தவிர்த்து ஊதா கலரில் ஜொலிக்கும் கம்பி மத்தாப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது குழந்தைகளை குஷிப்படுத்தி வருகிறது. மேலும் இந்த தீபாவளிக்கு களம் இறங்க உள்ள புதிய பட்டாசுகளின் விபரம் வருமாறு:கலைடாஸ்கோப்இந்த பட்டாசை பற்ற வைத்தவுடன் 100 முறை அடுத்தடுத்து வெடித்து மேலே சென்று பல வண்ணங்களில் நெருப்பை உமிழும். அதிக உயரத்தில் இந்த பட்டாசுகள் வர்ண ஜாலம் காட்டுவதால் இதனை டெலோஸ்கோப் மூலம் பார்த்தால் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

பனோரமா 500இந்த பட்டாசு 500 முறை அடுத்தடுத்து வெடித்து மின்னல் வேகத்தில் வானுக்கு பறந்து வர்ண ஜாலம் நிகழ்த்தும். சுமார் 30 நிமிடம் வரை வானில் பல வண்ணங்களில் வெடித்து கொண்டே இருக்கும். 



இதில் பச்சை, சிவப்பு, பர்ப்பிள், ஊதா போன்ற பல கலர்களில் ஒளியை சிதறவிட்டு பரவசத்தை உண்டாக்கும்.பியூட்டிபட்டாசை பற்ற வைத்தவுடன் மேலே சென்று அழகிய வடிவில் வெடித்து பல வண்ணங்களை வானில் தெளித்து மறையும். இந்த வகை பட்டாசுகள் பளிச்சிடும் வெண்ணிற ஒளியை உமிழ்ந்து மறைவது அழகாக இருக்கும்.

பிளையிங் பலூன்சிறுவர்களை குஷிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்டாசை பற்ற வைத்தவுடன் மேலே சென்று வெடித்து பலூன்கள் பல வண்ணங்களில் பறந்து விழும்.

விசிலிங் ஸ்பார்க்லர்கம்பி மத்தாப்பில் சிவப்பு, பச்சை நிறங்களில் தீப்பொறிகளை சிந்தியபடி விசில் சத்தம் கேட்கும். சிறுவர்களிடம் இந்த மத்தாப்பு சத்தம் புன்னகையை ஏற்படுத்தும்.

இது போன்று பல்வேறு புது ரக பட்டாசுகளை சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.



Popular Feed

Recent Story

Featured News