Saturday, October 27, 2018

அறிவியல் அறிவோம் -உலகிலேயே மிகப் பெரிய பறவை எது?

உலகிலேயே மிகப் பெரிய பறவை யானைப் பறவை. இது தற்போது உலகத்தில் வசிக்கவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். 



பழங்கால உயிரினமான யானைப் பறவையின் எலும்புகளை ஆராய்ச்சி செய்ததில், இது சுமார் 860 கிலோ எடை கொண்டதாக இருந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

முழுமையாக வளர்ச்சியடைந்த ஒட்டகச்சிவிங்கியின் எடை சுமார் 860 கிலோ. அப்படியென்றால் யானைப் பறவையின் உடல் அளவைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். எடை அதிகம் கொண்ட யானைப் பறவை, பறக்க இயலாத பறவைகளில் ஒன்று.



Popular Feed

Recent Story

Featured News