Tuesday, October 30, 2018

தமிழகத்தில் வெடி வெடிக்கும் நேரம் மாற்றம்!!

புதுடில்லி: தமிழகத்தில் தீபாவளி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.



மேல்முறையீடு

இந்தாண்டு தீபாவளி பண்டிகை, தமிழகத்தில், நவ., 6ம் தேதியும், வட மாநிலங்களில், 7ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, தீபாவளியின் போது, அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படும். 

இதனால், காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்தது. சமீபத்தில், இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில், 'தீபாவளி அன்று இரவு, 8:00 - 10:00 மணி வரை மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.இந்த உத்தரவு, பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தீபாவளியை, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடும், சிறார்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை, மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கும்படி, தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



பரிசீலனை

இந்த வழக்கை விசாரித்த கோர்ட், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வெடி வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உத்தரவிட்டது.

Popular Feed

Recent Story

Featured News