Wednesday, October 10, 2018

விரைவில்: மாணவிகள் பள்ளி வருகை குறித்து பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி அறிமுகம்.!

இப்போது வரும் சில தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். பின்பு பள்ளிகளில் கூட பல்வேறு புதிய தொழிநுட்பம் சார்ந்த சாதனங்கள் மற்றும் முயற்சிகள் தொடர்ந்துசெயல்படுத்தப்பட்டு தான் வருகிறது.



மேலும் அரசு மகளிர் பள்ளிகளில் மாணவிகள் பள்ளிக்கு வந்துசெல்வதை பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம்
வழங்கும் நிகழ்சி சென்னையில் இருக்கும் ராயப் பேட்டை பி.என்.தவான் ஆதர்ஷ் மெடரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் 257 பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.






நடவடிக்கை

பின்பு அந்த நிகழ்ச்சியில் பேசும் போது அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்திகொண்டு கட்டிட வரன்முறை பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் தற்காலிக அங்கீகாரம் அளித்து வருகிறோம் என்று தெரிவித்தார். மேலும் இதுவரை 1,183 பள்ளிகளுக்கும்இ தற்போது 257 பள்ளிகளுக்கும் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் 412 பள்ளிகளுக்கும் ஆணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.




பெற்றோருக்கு எஸ்எம்எஸ்




நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியது என்னவென்றால், மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதை அவர்களின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கும் திட்டத்தை அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் செயல்படுத்த உள்ளோம் என்று அவர் கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News