Monday, October 29, 2018

அரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் எல்.கே.ஜி. தொடங்கத் திட்டம்: செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து மழலையர் பாடத்திட்டம் (எல்.கே.ஜி.) கற்பிக்க முதல்வரிடம் ஒப்புதல் பெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.



ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: மழலையர் பாடத் திட்டம் தாய்மொழி தமிழில் உருவாக்கப்படுமா என்று கேட்கின்றனர். 

 இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் அரசு தமிழுக்கு முன்னுரிமை வழங்கும். மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளனர். அதனால் ஆங்கிலத்திலும் கற்றுத்தரப்படும். ஜனவரி முதல் தேதியில் இருந்து 52 ஆயிரம் குழந்தைகளுக்கு மழலையர் பாடத் திட்டம் (எல்.கே.ஜி.) கற்பிக்க முதல்வரிடம் ஒப்புதல் பெற உள்ளோம். 

 வளர்ந்து வரும் நவீன காலத்துக்கேற்பவும், மத்திய அரசு கொண்டு வரும் பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கும் வகையிலும் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




பள்ளிகளில் நடைபெறும் பாலியல் ரீதியான புகார்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், பள்ளிகி கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து பள்ளிகள் கண்காணிக்கப்படுகிறது. 

பள்ளிகளில் எந்தத் தவறு நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

Popular Feed

Recent Story

Featured News