Saturday, October 27, 2018

புதுப்புது வழிமுறைகள் 'வாயிலாக மத்திய பாடத்திட்டத்தையும் மிஞ்சுவோம்-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

'புதுப்புது வழிமுறைகள் வாயிலாக, எதிர்காலத்தில், தமிழக அரசின் கல்வித்திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் உருவாக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.



டில்லி தமிழ் கல்வி கழகத்தின் சார்பில், மயூர் விகார் பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில், புதிய பள்ளி கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்காக, சென்னையிலிருந்தே, 'வீடியோ கான்பரன்சிங்' மூலமாக, முதல்வர் பழனிசாமி, நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதற்காக, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்றனர். 

பின், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:



எதிர்காலத்தில், தமிழக அரசின் கல்வித்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் அமையும். காரணம், தற்போதைய பிளஸ் 1 பாடத்திட்டத்திலேயே, 'நீட்' தேர்வின், 40 சதவீத கேள்விகளுக்குரிய பதில்கள் உள்ளன.எடுத்தவுடனே, எதையுமே தலைகீழாக புரட்டிப்போட்டுவிட முடியாது. புதிய புதிய மாற்றங்களை, படிப்படியாகவே மேற்கொள்ள முடியும்

Popular Feed

Recent Story

Featured News