Monday, October 8, 2018

IAS, IPS, IRS. பதவிக்கான UPSC மெயின் தேர்வுக்கான ரிசல்ட் ஜனவரியில் வெளியீடு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கான ரிசல்ட் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளாது.



மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 789 பதவிகளை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஜூன் 3ம் தேதி நடத்தியது. இத்தேர்வை சுமார் 3 லட்சம் பேர் எழுதினர்.

இதில் இந்தியா முழுவதும் 9000 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் சுமார் 432 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த 28ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் 24 நகரங்களில் இத்தேர்வு நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் 2 இடங்களில் மட்டும் இந்த தேர்வுகள் நடந்தன. கடைசி தேர்வு நேற்று நடந்தது. காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. 



இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிறுவன தலைவர் சங்கர் கூறுகையில், ''மெயின் தேர்வு ரிசல்ட் ஜனவரி மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்வு மார்ச் மாதம் நடைபெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்'' என்றார்.



Popular Feed

Recent Story

Featured News