Friday, October 12, 2018

PRE KG வகுப்புகளை மாலை 4 மணி வரை நீடிக்க தமிழக அரசு ஆலோசனை!!

ப்ரிகேஜி (PRE KG) வகுப்புகளை மாலை 4 மணி வரை நீடிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



தமிழகத்தில் ப்ரிகேஜி வகுப்புகளை நடத்தி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மதியம் 1 மணி வரையே நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு அரசுக்கு அளித்துள்ள வரைவு பரிந்துரையில், ப்ரீகேஜி வகுப்புகளை மாலை 4 மணி வரை நீடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் குழந்தைகளை சிறிது நேரம் தூங்க வைத்து அதன்பின் பாடங்களை தொடர்ந்து நடத்தி மாலை 4 மணிக்கு குழந்தைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த பரிந்துரைக்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே ஆதரவு மற்றும் எதிர்ப்பு கலந்து காணப்படுகிறது. மிகவும் இளம் வயதில் குழந்தைகள் மீது இவ்வாறு கல்விச் சுமையை ஏற்றுவது அவசியமற்றது என தமிழ்நாடு மாணவர்கள் ஆசிரியர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. 



மாலை 4 வரை ப்ரீகேஜி வகுப்புகளை நீடிப்பது குழந்தைகளின் உடல் நலத்தை பாதிக்கும் என பெற்றோர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அதே நேரம் பணிக்கு செல்லும் பெற்றோர்களிடையே இந்த திட்டத்திற்கு வரவேற்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன



Popular Feed

Recent Story

Featured News