Monday, October 29, 2018

Science Fact - சோடா போன்ற மென்பானங்களில் (soft drinks) சிறிதளவு உப்பைச் சேர்த்தவுடன், அவை நுரையுடன் வெளியே பொங்கிவழிவது ஏன் ?




மென்பானம் என்பது கரிமவாக்கம் (carbonated) செய்யப்பட்ட, மணம்/நெடி சேர்ந்த வெறும் தண்ணீர்தான். 

அதாவது தண்ணீர் எந்த அளவு கரியமில வாயுவை (carbon-di-oxide) ஏற்றுக் கொள்ளுமோ அதைவிடக் கூடுதலான வாயுவை மீவுயர் (supersaturated)அழுத்தத்தில் கலந்து உண்டாக்கப்பட்டவையே இத்தகைய மென்பானங்களாகும்.



இவை மிக உயர்ந்த அழுத்தத்திலும், குறைந்த வெப்ப நிலையிலும் (temperature) தயாரிக்கப்படுகின்றன. அப்போது வாயுவுக்கும் தண்ணீருக்கும் இடையே ஒரு வகைச் சமநிலை (equilibrium)உருவாகிறது. பானம் நிரம்பியுள்ள கொள்கலனின் மூடியைத்திறக்கும்போது அழுத்தம் குறைந்து மேற்கூறிய சமனிலை பாதிக்கப்படுகிறது. இதனால் கூடுதலாக அடைக்கப்பட்டிருக்கும் வாயுவானது குமிழ்களாக வெளியேறத் துவங்குகிறது. அந்நிலையில் பானத்தில் சுற்றுப்புற அழுத்தத்திற்கும், வெப்ப நிலைக்கும் ஏற்ற வகையில் புதிய சமநிலை உருவாகும். அப்போது உப்பைச் சேர்த்தால் சமனிலை மீண்டும் பாதிக்கப்பட்டு மீவுயர் அழுத்தத்தில் அடைக்கப்பட்ட வாயுவானது நுரைத்துக்கொண்டு குமிழ்களாக வெளியேறுகின்றது.



சேர்க்கப்படும் உப்பின் அளவுக்கேற்ப இந்நிகழ்ச்சி விரைந்தும் தீவிரமாகவும் நடைபெறும். கூடுதல் வாயு வெளியேறும் வரை இந்நிகழ்ச்சி தொடரும். பானம் நிரம்பிய கொள்கலனைத் திறக்காமலே, சற்று வேகமாக ஆட்டினால் கூட சமநிலை பாதிக்கப்பட்டு பானத்தில் நுரையுடன் கூடிய குமிழ்கள் உண்டாவதைக் காணலாம்.

Popular Feed

Recent Story

Featured News