Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 9, 2018

வரலாற்றில் இன்று (09.11.2018)

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நவம்பர் 09 கிரிகோரியன் ஆண்டின் 313 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 314 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 52 நாட்கள் உள்ளன.



நிகழ்வுகள்

1793 – கிறிஸ்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.
1799 – பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
1872 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் ந்கரில் களஞ்சிய சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் பொஸ்டனின் பெரும் பக்தி அழிந்தது. 776 கட்டடங்கள் அழிந்து 20 பேர் கொல்லப்பட்டனர்.
1887 – ஐக்கிய அமெரிக்கா ஹவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.
1888 – கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.
1913 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.
1921 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1937 – ஜப்பானியப் படைகள் சீனாவின் ஷங்காய் நகரைக் கைப்பற்றினர்.
1938 – நாசி இட்லரின் யூதப் பகைமைக் கொள்கையின் ஒரு பகுதியாக செருமனியில் கிறிஸ்டல் இரவு நிகழ்வு இடம்பெற்றது. 90 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 25,000 பேர் கைது செய்யப்பட்டு நாசி வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
1953 – கம்போடியா, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1963 – ஜப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.
1963- ஜப்பான் யோகோஹாமா என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.



1967 – நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1985 – சதுரங்க உலகக்கிண்ணப் போட்டியில் காரி கஸ்பரோவ் அனத்தோலி கார்ப்பொவைத் தோற்கடித்து உலகின் முதலாவது வயது குறைந்த சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
1989 – பனிப்போர்: கம்யூனிசக் கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜேர்மனிக்குள் செல்ல ஆரம்பித்தனர்.
1990 – நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1994 – டார்ம்ஸ்டாட்டியம் (Darmstadtium) என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
2000 – உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
2005 – வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.
2005 – ஜோர்தானின் அம்மான் நகரில் மூன்று விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்



1877 – முகமது இக்பால், பாக்கித்தானிய மெய்யியலாளர், கவிஞர், அரசியல்வாதி (இ. 1938)
1897 – ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ், ஆங்கிலேய வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1978)
1934 – கார்ல் சேகன், அமெரிக்க வானியலாளர், எழுத்தாளர் (இ. 1996)
1952 – ஜாக் சோஸ்டாக், உயிரியலாளர், நோபல் பரிசு பெற்றவர்
1959 – ஈ. காயத்ரி, வீணைக் கலைஞர்

இறப்புகள்

1918 – கியோம் அப்போலினேர், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1880)
1953 – அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அரேபிய மன்னர் (பி. 1880)
1962 – தோண்டோ கேசவ் கார்வே, இந்திய செயற்திறனாளர் (பி. 1858)
1970 – சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதி, அரசியல்வாதி (பி. 1890)
1988 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (பி.1937)
1992 – தா. சிவசிதம்பரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1926)
2004 – ஸ்டீக் லார்சன், சுவீடிய ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1954)
2005 – கே. ஆர். நாராயணன், இந்தியக் குடியரசுத் தலைவர், (பி. 1921) .
2006 – வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (பி. 1920)



சிறப்பு நாள்

கம்போடியா – விடுதலை நாள் (1953)

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News