Saturday, November 17, 2018

1000 கிலோ நாய்க்கறி பறிமுதல் - ஹோட்டல்களில், பிரியாணியில் கலந்து விற்பது அம்பலம்





சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, ரயில் வழியாக சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அந்த நாய்க்கறிகள், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டபோது பிடிபட்டன. ரகசிய தகவலைத் தொடர்ந்து, ரயில்வே போலீஸ், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாட்டுக்கறி ஆட்டு கறி என்று, கூறிக்கொண்டு நாய்க்கறியை அவர்கள் கொண்டு வந்தது, சோதனையில் தெரியவந்துள்ளது.





சென்னை உட்பட தமிழகம் முழுக்க, நாய்க்கறியை சில ஹோட்டல்கள், தாபாக்களுக்கு சப்ளை செய்யும் நோக்கத்தில் இது கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பான விசாரணையில், நாய்க்கறியை எந்தெந்த ஹோட்டல்கள் வாங்குகின்றன என்ற தகவல்கள் கிடைக்கலாம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சில ஹோட்டல்களில், பிரியாணியில், மட்டனுக்கு பதில், நாய்க்கறி கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது கடந்த கால வரலாறு. இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் நல்லவேளையாக தப்பினர் சென்னைவாசிகள்.



1 comment:

  1. தேவுடியா மகருங்கலா.உன் குடும்பத்துக்கு குடுங்க டா

    ReplyDelete

Popular Feed

Recent Story

Featured News