Thursday, November 29, 2018

1,132 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.1.13 கோடி ஒதுக்கீடு

அங்கன்வாடி மையங்களில், குடிநீர் வசதியை மேம்படுத்த, 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு, 1,132 மையங்களில், 1.13 கோடி ரூபாய் செலவில், பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



அதன்படி, நிதி ஒதுக்கக் கோரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, மத்திய அரசு உதவியுடன், இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒரு மையத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம், 1,132 மையங்களுக்கு, 1.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 500 லிட்டர் கொள்ளளவு உள்ள, குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். 



குடிநீர் குழாய், கழிப்பறை, சமையல் அறை ஆகியவற்றுக்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.இதற்கான அரசாணையை, சமூக நலத் துறை முதன்மை செயலர், மணிவாசன் பிறப்பித்து உள்ளார்



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News